வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. செக் விதிமுறைகள் மாற்றம்… வங்கியின் அதிரடி அறிவிப்பு…!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி செக்  கிளியரன்ஸ் செய்வதற்கு விதிமுறைகளை மாற்றியுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி செக் (காசோலை) கிளியரன்ஸ் தொடர்பாக விதிமுறைகளில் சில மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி ரூபாய் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்பு கொண்ட காசோலைகள் வாடிக்கையாளரிடம் இருந்து உறுதி செய்யப்பட்ட பிறகே கிளியர் ஆகும் என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே  ரூ.50,000-க்கு மேல் செக் கிளியர் செய்வதற்கு வாடிக்கையாளர்களிடம் உறுதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.

எனினும் இந்த விதிமுறை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மட்டுமே செயல்படுத்தப்படுவதாக கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ.5,00,000-க்கு மேல்   செக் கிளியர் செய்வதற்கு வங்கிகள் விருப்பப்பட்டால் மட்டுமே கட்டாயமாக்கி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.10,00,000-க்கு மேல் செக் கிளியர் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளது.

எனவே இதன்படி செக்கு கிளியரன்ஸ் ஆவதற்கு வாடிக்கையாளர் தங்களின் அக்கவுண்ட் எண்,செக் நம்பர், செக் ஆல்ஃபா கோடு செக் வழங்கப்பட்டதேதி, தொகை மற்றும் பயனாளர் பெயர் ஆகிய விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல் அவசியம்.  மேலும் இந்த தகவல்கள் கிளியரன்ஸுக்கு  24 மணி நேரத்துக்கு முன்பே பகிர்ந்துகொள்ள பட்டிருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து நெட் பேங்கிங் ,மொபைல் பேங்கிங் மூலமாகவும் அல்லது நேரடியாக வங்கிக் கிளைக்கு சென்றும் தகவல்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.