லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். பிரதமரை எப்பொழுதும் ராமர் கோயில் பற்றி பெருமையாக பேசுவதாக கூறிய லாலு பிரசாத் யாதவ் மோடி ஒரு இந்துவே இல்லை என்று கூறினார். இந்து மதத்தைச் சேர்ந்த ஆண் அவர்களுடைய பெற்றோர் மறைந்தால் தாடி தலைமுடி முழுவதும் சவரம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அவர்களோ அவருடைய தாயாரின் மறைவின் போதும் தாடி மற்றும் தலை முடியை எடுக்கவில்லை என்று கூறினார்.

மேலும் பிரதமர் மோடி குடும்ப அரசியல் குறித்து பேசுவதையும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார் . அதாவது பிரதமர் கூட ரொம்ப  வாரிசு அரசியல் குறித்து பேசுகிறார் . தனக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்பதை அவர் விளக்க வேண்டும் என்று எல்லை மீறி விமர்சித்து இருந்தார். இந்நிலையில் இவரின் பேச்சுக்கு பாஜகவினர்  பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மோடி கா பரிவார் அதாவது மோடியின் குடும்பம் என்ற சொல்லை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பெயருக்கு பின்னால் சேர்த்து வருகிறார்கள். இந்தி மொழி பேசுபவர்கள் மோடி கா பரிவார் என்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவினர் மோடியின் குடும்பம் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். மேலும் நாட்டில் உள்ள 140 கோடி இந்தியர்கள் தான் மோடியின் குடும்பம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.