காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, கல்விக்காக வள்ளல் அழகப்பர் செய்துள்ள தொண்டு மிக முக்கியமானது. வள்ளல் அழகப்பர் பிறந்த மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி. திருவள்ளுவரை யாரும் கபளீகரம் செய்து விடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அழகப்பர் பெயரில் அமைந்துள்ள பல்கலை.யில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.

வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது. இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. மாணவர்களின் கல்விக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நூலகங்களை அதிகளவில் உருவாக்க வேண்டும். எனக்கு பரிசாக வந்த சுமார் 2 லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கியுள்ளேன். பல்கலை. வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.