தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜா பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி குடும்பத்தில் நடைபெறும் விசேஷங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி அண்மையில் உடல் மெலிந்த நிலையில் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ரோபோ சங்கரை பற்றி பல செய்திகளும் இணையத்தில் உலா வந்தன. என் நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அதனைப் பார்த்து ரசிகர்கள் இந்திரஜாவிற்கு கல்யாணமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு இந்திரஜா, ஆமாம் ஆனால் திகதி இன்னும் முடிவு செய்யவில்லை என பதிலளித்துள்ளார். தற்போது அவர் தனது வருங்கால கணவருடன் இணைந்து ரீல்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

INDRAJA SANKAR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indraja_sankar17)