குஜராத்தில் ஒரு வைரத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மேனேஜராக இருந்துள்ளார். இங்கு 14 வயது சிறுமி ஒருவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த சிறுமியை சம்பவ நாளில் அந்த மேனேஜர் சிறுமியை அழைத்துக்கொண்டு மும்பைக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் அவர்கள் தங்கிய நிலையில் சிறுமியிடம் மேனேஜர் திடீரென அத்துமீற முயன்றார். அதாவது அவர் வயகரா மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.