தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவாக இருக்கிறோம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

வன்முறை வெறியாட்டங்களையும் வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும் முறியடித்து வெற்றி பெற வேண்டும். வம்பு சண்டைக்கு போவதில்லை, ஆனால் வந்த சண்டையை விடுவதில்லை. சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று பாஜகவை நேரடியாக எச்சரித்துள்ளார்.