தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 15 நாட்களாக திமுக அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது நன்றாக தெரியும். முதலில் ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர்கள் கூறிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் அனுதாபி ஞானசேகரன் என்று கூறுகிறார். முதலமைச்சர் யுஜிசி தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக கருத்து சொல்ல பிப்ரவரி 5ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் உறுப்பினர்கள் மாநில அரசு சார்பில் இருக்கிறார்கள். இதை வேண்டுமென்றே அரசியல் ஆக்கிய திட்டமிட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சட்டசபையை பார்க்கும்போது வடிவேலுவின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் போல் தெரிகிறது. அதாவது அந்த படத்தில் புகழ்வது போல் முதல்வரை புகழ்கிறார்கள். வடிவேலு இடத்தில் செல்வப் பெருந்தகை இருக்கிறார். சீமானுக்கு ஆதரவாக நாங்கள் ஆதாரத்தை தருகிறோம் என்று கூறினார்.