நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. UFBU 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக AIBEA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற UFBU கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் 2 நாட்கள் இயங்காது.