விஜய்யின் அடுத்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்போது காஷ்மீரில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. மொத்த படக்குழுவும், அங்கே இருக்க திரிஷா மட்டும் 3 நாட்களில் சென்னைக்கு  திரும்பினார். இதை தெரிந்த நம்ம நெட்டிசன்ஸ் திரிஷா-வை முதல் சீனிலேயே லோகேஷ் கொன்றுவிட்டாரா என கலாய்த்து மீம்ஸ் போட்டிருந்தனர்.

இந்நிலையில் த்ரிஷா  ட்விட்டரில் படம் தொடர்பான சில ட்வீட்களையும் நீக்கியிருந்தார். இதனால் திரிஷா, படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பழைய ட்வீட்களை நீக்குவது அவரது பழக்கம் என்றும் படத்தில் இருந்து விலகவில்லை என்றும் அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இது வெறும் வதந்தியே.