தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் விஜய் மகளாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்த வரும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஜூலை மாதம் இறுதியில் லியோ படத்திற்கான படப்பிடிப்பு முடிவடையும் என்று படக்குழு அறிவித்துள்ளது.