சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆன ரோஜா என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. தற்போது ரோஜா சீரியல் சன் டிவியில் முடிவடைந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி அடுத்ததாக நடிக்க போகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கன்னட நடிகையான பிரியங்கா பல படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரோஜா சீரியலுக்கு பிறகு நடிகை பிரியங்கா எந்த சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் பிரியங்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி சீதாராமன் என்ற புது தொடரில் நடிகை பிரியங்கா நடிக்க இருக்கிறாராம். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது