
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன்பிறகு பல அரசின் திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட்டது.
ஆனால் 85 சதவீதம் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவடைந்த நிலையில் பலர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை என்று கூறப்பட்டதால் பொங்கலுக்கு பிறகும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் பெரிய கருப்பன் ஜனவரி 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் அதன்படி நாளை கடைசி நாள் என்பதால் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.