அமெரிக்க பாடகி டெய்லர் சிப்ட், ஒலிவியா என்ற பூனையை வளர்த்து வருகின்றார். தன்னுடைய பாடல்கள் மற்றும் விளம்பரங்களில் பூனையை நடிக்க வைப்பது அவரின் வழக்கம். இந்நிலையில் அவருடைய பூனை வீடியோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மூலம் சுமார் 800 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. இதனை தொடர்ந்து உலகின் பணக்கார செல்லப் பிராணிகள் பட்டியலில் அந்த பூனை மூன்றாவது இடத்தில் உள்ளது.