தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண் பிள்ளை வைத்திருக்கும் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் வாங்குவது கடினமான காரியமாக மாறி வருகிறது. இந்த நிலையில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கம் நடப்பு ஆண்டு இறுதிக்குள் 75 ஆயிரம் ரூபாயை கடக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 10 கிராம் தங்கம் 11 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.