தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் சின்னத்திரை சீரியல்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நீலிமா ராணி கடந்த 2008-ம் ஆண்டு தன்னைவிட 10 வயது பெரியவரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தன் வாழ்க்கையின் கடினமான நேரம் குறித்து நடிகை நீலிமா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது நடிகை நீலிமா மற்றும் அவருடைய கணவர் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து நியூசிலாந்துக்கு 50 நாள் சூட்டிங் சென்றுள்ளனர்.

இங்கிருந்து 55 பேரை 4.50 கோடி ரூபாய் செலவு செய்து நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் நம்பிய நண்பர்களே சிலர் முதுகில் குத்தியதால் அதிக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கையில் இருந்த பணம் மற்றும் வீடு என அனைத்தையும் இழந்து இனி வீட்டிற்கு போனால் நன்றாக இருக்காது என கருதி இசைவாணனின் நண்பர் வீட்டில் தங்கி உள்ளனர். மேலும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து வாடகைக்கு இருந்து வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளனர்.