தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த பரிமாணத்திற்கு உயர்த்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெற்றி தமிழ்நாடு’ புதிய தொழில் தொடக்கத் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பெருநிறுவன முதலீடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

‘வெற்றி தமிழ்நாடு’ திட்டத்தின் முதற்கட்டமாக, வாகனம் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி, பிளாஸ்டிக் பொருட்கள், டேட்டா சென்டர் மற்றும் ஏசி சாதனங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஜே.கே. டயர் , ஒய்.கே.கே  டைமெக்ஸ் , ஆப்டிவ் மற்றும் அவிட் குரூப் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக தமிழக இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவுமாகச் சுமார் 1,21,788 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

“>

 

மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதோடு, படித்த இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் ஒரு மைல்கல் திட்டமாக ‘வெற்றி தமிழ்நாடு’ உருவெடுத்துள்ளது.