இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வட்டியும் அதிகம். அதன்படி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் தினமும் 100 ரூபாய் டெபாசிட் செய்தால் 30 நாட்களில் 3000 ரூபாய் டெபாசிட் செய்து விடுவீர்கள். ஒவ்வொரு மாதமும் இந்த தொகை செலுத்தப்படும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகளில் 1,80,000 ரூபாயாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கும்.
மேலும் இதற்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளில் வட்டி மூலமாக மட்டுமே உங்களுக்கு ரூ.34,097 கிடைக்கும். இந்த திட்டத்தின் கணக்கு முதிர்ச்சி அடைந்த பின்னர் மொத்தம் ரூ.2,14,097 உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிக வருமானம் தரக்கூடிய இந்த தபால் நிலைய திட்டத்தில் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகிறார்கள்.