இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ஏமாற்றியதாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பண மோசடி செய்ததாக புகாரளித்த அறுவை சிகிச்சை நிபுணர் சங்கத்தினர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.29 லட்சம் முன்பணம் பெற்று ஏ.ஆர்.ரஹ்மான் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், 15 நாட்களுக்குள் ரூ.10 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.