திரை உலகின் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா பல படங்களில் நடித்து தனக்கு என்று தனி ரசிகர்களை வைத்துள்ளார். தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர் பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனாவுக்கு உடற்பயிற்சி கூடத்தில் வைத்து காயம் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் சில காலம் சினிமா சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ராஷ்மிகா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.