ரயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே அவ்வப்போது பல்வேறு புது விதிமுறைகளை வகுக்கிறது. மேலும் பழைய விதிமுறைகளை மாற்றுகிறது. அந்த வகையில் உங்களிடம் செல்லப்பிராணிகள் இருப்பின், முன்பு ரயிலில் செல்லப்பிராணிகளுடன் பயணம் மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது.

எனினும் தற்போது இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. செல்ல நாய்கள் (அ) பூனைகளை ரயிலில் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச்செல்லலாம் எனும் புதிய விதியை ரயில்வே அமைச்சகம் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.