சில சமயத்தில் ரயில் பயணம் செய்வதற்கு நம்முடைய குடும்பத்தாரையோ அல்லது தெரிந்தவர்களையோ ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அவர்கள் ரயிலில் அமரும் வரை அங்கேயே காத்திருப்போம்.  விதிமுறைப்படி அது தவறு. அதாவது டிக்கட் இல்லாமல் ரயில் நிலையத்திற்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு செல்வதாக இருந்தால் அதற்கு தனியாக டிக்கெட் எடுக்க வேண்டுமாம் .இந்திய ரயில்வே விதியின்படி ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் இல்லாத நபருக்கு அபராதம் விதிக்கப்படும்.

பயணம் செய்யாமல் சில காரணங்களுக்காக ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டும். இந்த டிக்கெட் இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். நடைமேடை டிக்கெட் விலை 10 முதல் 50 ரூபாய் வரை இருக்கும் .பிளாட்பார்ம் டிக்கெட் உடன் ஒருவர் நாள் முழுவதும் பிளாட்பாரத்தில் இருக்க முடியாது. எனவே நண்பர்களையோ, உறவினர்களையோ அழைத்து செல்வதாக இருந்தால் நடைமேடை டிக்கெட் எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.