
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆம் வருடம் வெளியான திரைப்படம் Jailer. இந்த படம் வெற்றி படமாக அமைந்து உலக அளவில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று நெல்சன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று சன் பிக்சர்ஸ் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் ரஜினி நடிக்கும் படத்தின் டீசரை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
https://twitter.com/i/status/1878404139031687512