பிரபல கன்னட நடிகர் துவராகீஷ்(81) மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா என்ற படத்தை இயக்கி நடித்த இவர் ரஜினியுடன் நான் அடிமை இல்லை மற்றும் அடுத்த வாரிசு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.