
தற்போது நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்யும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவற்றில் முத்து வேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தில் பிரபலமான கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சில நாட்களுக்கு முன் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி உடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்து உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.