
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது ரஜினி நடித்த படங்களில் அப்போதைய காலகட்டத்தில் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் பில்லா படத்தை ரீமேக் செய்து அஜித்தை வைத்து இயக்கிய இயக்குனர் விஷ்ணுவரதன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் ரஜினி நடித்த பில்லா திரைப்படம் ஒரு தோல்வி படம் என்று கூறி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ரஜினி ரசிகர்கள் படத்தின் வெற்றி குறித்து பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதோடு ரியாஸ் அகமத் என்பவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் இயக்குனர் விஷ்ணுவர்தனை குறிப்பிட்டு “1980 ஆம் ஆண்டு வெளியான #பில்லா ஒரு வெள்ளி விழா ஹிட் என்பதை பணிவுடன் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அசல் பதிப்பின் தயாரிப்பாளர் திரு. சுரேஷ் பாலாஜியிடம் இதை நீங்கள் தயவுசெய்து உறுதிப்படுத்தலாம். தவறான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க உங்கள் அறிக்கைகளில் துல்லியத்தை உறுதிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.