தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சித்தார்த். இவர் தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “டக்கர்”. இந்த படத்தை கார்த்திக் ஜி.கிரிஷ் டைரக்டு செய்து உள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சித்தார்த்திடம் ரசிகர் ஒருவர் “நீங்கள் தற்போதெல்லாம் அரசியல் பற்றி எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதியா இருப்பது ஏன்?” என்று கேட்டுள்ளார். அதற்கு சித்தார்த் “எங்கே என்ன பேசவேண்டும் என எனக்கு தெரியும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீங்க” என கோபமாக கூறியுள்ளார்.