கொலம்பியா நாட்டைச் சேர்ந்த மிிரியம் என்ற பெண், ஊரில் நடக்கும் கிசுகிசுக்களைத் தனது தொழிலாக மாற்றி அதன் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு சொந்தமாக இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார். பொதுவாக வதந்திகளைப் பேசுவது பலருக்குப் பொழுதுபோக்காக இருக்கும் நிலையில், இவர் அதனை ஒரு லாபகரமான வணிகமாக மாற்றி அசத்தியுள்ளது உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, திருமணத் தாண்டிய உறவுகளில் ஈடுப்பட்டிருப்பவர்களைக் கண்டுபிடித்து, அந்த ரகசியங்களை அவர்களின் இணையிடத்தில் காட்டிக் கொடுக்காமல் இருக்க அவர்களிடம் பேரம் பேசிப் பணம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எங்கு சென்றாலும் அதற்கான ஆதாரங்களை நோட்டுகளாகவும், உரையாடல்களைச் செல்போனில் ஆடியோவாகவும் ரகசியமாகப் பதிவு செய்து வைப்பதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய தொழிலின் மூலமாக இவர் பார்த்த அதீத லாபத்தால், தற்போது சொந்தமாக இரண்டு பிரம்மாண்டமான வீடுகளை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “இது பிசினஸ்” என்று வெளிப்படையாகக் கூறி வதந்திகளை வியாபாரம் செய்துவரும் மிிரியமின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதோடு, இணையத்தில் செம வைரலாகவும் பரவி வருகிறது.