இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே மலை பாம்பு மற்றும் முதலை ஆகிய இரண்டுமே மனிதர்களை பொறுத்தவரையில் மோசமான ஆபத்தை விளைவிக்க கூடிய விலங்குகள் ஆகும்.

மலைப்பாம்பு தன்னை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட உயிரினங்களை கூட அசால்டாக வேட்டையாடும். அதனைப் போலவே முதலையும் வேட்டை மிருகங்களான சிங்கம் மற்றும் புலி போன்ற மிருகங்களை கூட வேட்டையாடும் தன்மை உடையது. மொத்தத்தில் முதலையும் மலைப்பாம்பு ஒன்றுக்கொன்று சளைத்தவை கிடையாது. இந்த நிலையில் இவை இரண்டில் எது பெரியது என உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக மலைப்பாம்புக்கும் முதலைக்கும் இடையே நிகழும் வேட்டை போராட்டம் அடங்கிய அரிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.