புதுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும் பயப்பட மாட்டோம் என  பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ தான் பாஜவின் தொண்டர் படை யாராக இருந்தாலும் சரி.

செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் சோதனை என்ற பெயரில் கொடுமைபடுத்தி உள்ளனர். 2019, 2021 தேர்தல்களை போல 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும். மோடிக்கும் பயப்பட மாட்டோம் ஈடிக்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம்” என்றார்.