ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் சார்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் 69 ரன்களும், துபே 66 ரன்களும் எடுத்திருந்தனர்.

அதன் பிறகு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்களை குவித்தனர். இஷான் கிசன் 23 ரன்களில் வெளியேறிய நிலையில், சூர்யகுமார் முதல் ஓவரிலேயே வெளியேறினார். இதைத்தொடர்ந்து ரோகித் மற்றும் திலக் ஜோடி ஆடினர். ரோஹித் சர்மா 30 பந்தில் அரை சதம் விளாசிய நிலையில், திலக் 30 ரன்களில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரோகித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் மும்பை அணி 186 ரன்கள் எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் சென்னை அணியில் பத்திரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.