பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் சென்னையில் இருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக நேற்று முதல் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் கோவை, சேலம், திருப்பூர், சென்னை போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரையும் ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரையும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலில், நேற்று முதல் நாளில் சென்னையில் இருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் சென்றுள்ளதாக கூறியுள்ளனர். அதேபோல் சென்னையில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 586 பேருந்துகள் என மொத்தம் 2,686 பேருந்துகளில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 300 பேர் பயணம் செய்துள்ளனர்.