ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த அமைச்சர்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளதன் மூலமாக தமிழக மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையை தி.மு.க அரசு ஏற்படுத்தி இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும் நீதிமன்ற வளாகத்திலும் இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. மேலும் துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கு சீர்குலைந்து காணப்படுகிறது.

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒட்டுமொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பி விட்டு பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.