தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல்வர் ஸ்டாலின் தந்தை பெயரில் அவசியமற்ற பணிகள் தமிழகம் முழுவதும் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தின் போது தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக தமிழகம் முழுவதும் பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதன் காரணமாக அந்த பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. எ
னவே உடனடியாக அந்த திட்டங்களுக்கு தேவையான நிதியினை ஒதுக்கி பணிகளை முழுமை பெற செய்ய வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் செய்யப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் அரசு கட்டிடங்களுக்கு அவருடைய தந்தை பெயரை வைக்க வேண்டும் என்றால் அவருடைய அறக்கட்டளை சார்பில் இந்த பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் தேவையான திட்டங்களை செய்யாமல் அவசியமற்ற பணிகளுக்காக தேவையில்லாமல் அரசு செலவு செய்கிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.