தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் சம்பளம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, நான் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு ஒரு ஹோட்டலில் வேலை செய்தேன்.

அப்போது எனக்கு ஒரு நாளைக்கு ரூ‌.500 சம்பளம் தருவார்கள். இதுதான் என்னுடைய முதல் சம்பளமாக இருந்தது என்று கூறியுள்ளார். நடிகை சமந்தா முதலில் மிக குறைந்த சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுகிறார். மேலும் ஹிந்தியில் நடிகை சமந்தா நடித்து வரும் சிட்டாடல் என்ற வெப் தொடர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.