தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பல மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அடுத்ததாக ஒரு புது படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது மித்ரன் ஜவஹர் மாதவனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறாராம். இந்த படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா நடிக்க இருக்கிறாராம். மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.