கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்பிறகு  பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 1280 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் தற்போது வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிக்காக ரூ‌.2 கோடி கொடுத்துள்ளார். மேலும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியான நிலையில் அந்த படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.