வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தமிழ் பகுதி வட மேற்கு திசையில் நகர்கிறது. இது புதன்கிழமை அன்று இலங்கை தமிழகம் நோக்கி நகரும். எனவே தமிழ்நாடு புதுச்சேரியில் மழை பெய்யலாம். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யலாம் என எச்சரித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி அரியலூரில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. நாளை மறுதினம் பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.