தேனி மாவட்டத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகளுடன் வசித்து வருகிறார். 6 வயதுடைய இளைய மகள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் 14 வயது சிறுவன் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை தனது வீட்டில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டதால் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்ட் சிறுவன் அனுப்பியதாக தெரிகிறது.

அதன்பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அனைத்து மாநில காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.