கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மாணவி கலைச்செல்வி நுண்கலை பிரிவில் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.

இந்த சிற்பம் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவி கலைச்செல்வியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதிகா, துணை தலைமை ஆசிரியர் மேகனா, பிற ஆசிரியர்கள், சக மாணவர்கள் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர்.