நாளை முதல் அனைத்து பள்ளிகளிலும் 6-10ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு தொடங்குகிறது. செப்டம்பர் 19 முதல் 27ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. நடப்பு வாரத்தில் மொழிப் பாடம், தேர்வு பாடம், ஆங்கிலம், உடற்கல்வி என நான்கு தேர்வுகளும், அடுத்த வாரம் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என மூன்று தேர்வுகளும் நடைபெறுகின்றன. இடையில் சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தொடர்ச்சியாக தேர்வுகள் நடைபெறுகிறது.
முதல்முறையாக அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வு போன்று ஒரே வினாத்தாள் வழங்குவதால், வினாத்தாள் லீக் ஆகாமல் எச்சரிக்கையுடன் அச்சிட்டு வழங்குமாறும், ஏதேனும் முறைகேடு நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.