தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இணைந்து படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்ப பதிவு தொடங்கிய 12 நாட்களில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.