மத்திய அமைச்சரவை தற்போது PM வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது மட்டும் தான். இந்த திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து கல்வி கடன் பெற மாணவர்கள் எந்த ஒரு உத்திரவாதமும் அளிக்க வேண்டிய தேவை கிடையாது. படிப்புக்கு தேவையான முழு தொகையையும் அவர்கள் பணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக PM வித்யா லட்சுமி தளத்தில் விண்ணப்பித்த கல்வி கடன் பெற வேண்டும்.
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு 75% மத்திய அரசின் உத்தரவாதத்துடன் 7.50 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். அதன் பிறகு ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ள மாணவர்களின் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 10 லட்சம் வரையில் கடன் பெற்றுக்கொள்வதோடு 3 சதவீத வட்டி சலுகையும் கிடைக்கும். மேலும் அதே நேரத்தில் இந்த மாணவர்கள் கல்விக்காக வழங்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட பிற சலுகை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.