சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனர் ஒருவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு 21 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர் ஒரு மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு பாய்ண்ட் வந்த நிலையில் இவருடைய தாயார் கடந்த 2022 ஆம் ஆண்டு இறந்த நிலையில் அதன் பிறகு மாணவிக்கு சற்று மனநலம் பாதித்ததாக கூறப்படும் நிலையில் தினமும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவியின் செல்போனுக்கு குறுந்தகவல்கள் மற்றும் தவறான புகைப்படங்கள் வந்ததால் அதை பார்த்த தந்தை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் கொடுத்த நிலையில் தன் மகளுக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் இருந்ததால் சந்தேகம் அடைந்த தந்தை பின் விசாரித்துள்ளார். அ

ப்போது தோழி மூலம் தெரிந்த சிலர் தன்னை விடுதிக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். பின்னர் இது தொடர்பாக தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி இளம் பெண்ணின் தோழி மற்றும் ஆண் நண்பர்கள் உட்பட 8;பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு மனநலம் பாதித்த மாணவியை பல மாதங்களாக 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிற மாநில பிரச்சினைகள் பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இதைப் பற்றி ஏன் பேசவில்லை என்றும் அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்பிறகு பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் கொடுத்த நிலையிலும் காவல்துறையினர் அந்த நபர்களை எச்சரித்து விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது என்று கூறியுள்ளார். அதன் பிறகு மாணவியின் உறவினர் ஒருவர் மூலம் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பாலியல் பலாத்காரப் புகாரில் வெறும் எச்சரிக்கையோடு குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரத்தை காவல்துறையினருக்கு யார் கொடுத்தது. மனநலம் பாதித்த ‌ ஒரு பெண் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை எவ்வளவு எளிதாக கடந்து சென்றுள்ளார்கள். மேலும் தன் பொறுப்பில் இருக்கும் தமிழக காவல்துறையை முதல்வர் ஸ்டாலின் எந்த விதத்தில் கையாள்கிறார் என்று உடனடியாக பதில் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.