சென்னை தீவுத்திடரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் 14.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட 52 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் சார்ஜ் போடும் வசதியும் உள்ளது. வயதானவர்கள் ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தானியங்கி கதவு மற்றும் டிஜிட்டல் பெயர் பலகை உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்துகள் சாலையில் ஓடும் போது புதிய மலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறினார்.