தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் இதே போன்ற மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து 22 பேர் உயிரிழந்தனர். அப்போது அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது பக்கத்து மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் கொத்து கொத்தாக மக்கள் பலியாகியுள்ளனர். இப்போது வரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

விஷ சாராயத்தை தடுக்க தவறிய அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசும் பொருளாக மட்டுமே இருக்கிறது. மேலும் அரசாங்கமே குடிப்பழக்கத்தை ஊக்கபடுத்தி மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்தி வரும் வன்முறையை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.