பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை வரும் 15 ஆம் தேதி துவங்கப்பட்டு ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்கள் ஜனவரி 14ம் தேதி நள்ளிரவு முதல் சலுகைகளை பெற முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் 40 பிளிப்கார்ட் சூப்பர் காயின்களை பயன்படுத்தி பிளஸ் மெம்பர்ஷிப்பிற்காக பதிவுசெய்து முன்னதாகவே இந்த விற்பனையில் இணைந்து கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த விழாக்கால விற்பனையில் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருளை வாங்குவோருக்கு 5 சதவீதம் வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. மேலும் இ-காமர்ஸ் சேனல் சிட்டி வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

அதோடு பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் பே லேட்டர் திட்டமும் வழங்கப்படுகிறது. வாடிக்கைகையாளர்களுக்கு ரூபாய்.1000 மதிப்புள்ள கிப்ட் கார்டுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த விற்பனை காலத்தில் ஸ்மார்ட் போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் அறிவிக்கவில்லை. மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு 80 சதவீத தள்ளுபடி வழங்குவதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.