சாலை ஓர தள்ளுவண்டி கடையில்  டீ, காபி, லஸ்ஸி  வகைகள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் அவற்றின் விலையை விட இந்தியாவில் வழங்கப்படும் 1GB டேட்டாவின் விலை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொலைத்தொடர்புத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்தியாவில் வழங்கப்படும் 1gb டேட்டா ஒரு கப் காப்பியை விட மலிவானது” என்று பதிவிட்டிருந்தார். சமீபத்தில் மக்களவையில் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதி ராதித்ய சந்தியா பேசினார்.

அதில் அவர் கூறியதாவது, நாட்டில் 117 கோடி மொபைல் இணைப்புகள் மற்றும் 93 கோடி இனைய இணைப்புகள் உள்ளன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு அழைப்பிற்கும் 53 பைசா என்று கூறினார். இதையடுத்து 1gb டேட்டாவின் விலை 9.12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உலகிலேயே இந்தியாவில்தான் குறைந்த விலையில் டேட்டா வழங்கப்படுகிறது என்று கூறினார். மேலும் ஜியா, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர் நிறுவனங்கள் சமீபத்தில்  ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவித்த  நிலையில் பிஎஸ்என்எல் மட்டும் விலையை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.