தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் பருவமழை தொடர்பான காய்ச்சல் பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கொசுக்களால் பரவும் டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் இருக்கும் நிலையில், தற்போது டெங்குவுடன் சேர்ந்து பருவகால இன்புளூயன்சா தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வகை இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது. இதனால் தீவிரவாதிப்புக்கு உள்ளானவர்களை அதிக கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இதன் காரணமாக காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் என்று கேட்கப்பட்டுள்ளது.