கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இதனால், நிராகரிப்புக்கான காரணங்களுடன் SMS அனுப்பப்படுகிறது.  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் பெரும்பாலும் அனைவருக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுவிட்டது.

இந்நிலையில் அந்த காரணத்தை மறைத்து சிலர் மேல் முறையீடு செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இத்திட்டம், தேவை உள்ளோருக்கு தமிழக அரசினால் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும். இதில் ஏமாற்றினால் அது அரசுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும். எனவே உண்மையான தகவலை மட்டும் பதிவு செய்வோமே..