
பிரேசிலில், ஒரு தந்தைக்கு நடந்த உணர்வுப்பூர்வமான சந்திப்பு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘வீடியோ அழைப்பில்’ மகனை காண தந்தை ஆவலுடன் இருந்த போது, உண்மையில் அந்த மகன் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார்.
இது ஒரு அழகான ஆச்சரியமாக மாறியது. தந்தையின் பின்னால் நின்ற மகன், திரையில் கையை அசைத்து சைகை செய்தாலும், தந்தைக்கு எதுவும் புரியவில்லை. மேலும் மகன் விளையாட்டாக தந்தையின் தலைக்குப் பின்னால் முயல் காதுகளை உருவாக்க, தந்தை அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டார். பின்னர், குடும்பத்தினர் ஒருவர் கூற, தந்தை திரும்பிப் பார்த்ததும், மகனை நேரில் பார்த்த அவர் ஆனந்த கண்ணீருடன் கட்டி அணைத்தார்.
View this post on Instagram
அந்த மனதை உருக்கும் வீடியோ, “நான் அழுகிறேன்” எனும் தலைப்புடன் வெளியானதை அடுத்து ஒரே நாளில் 2.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இது சமூக வலைதளங்களில் பலரது இதயத்தையும் கண்களையும் ஈர்த்துள்ளது.
பலரும் தந்தை மகனின் அன்பை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இன்றைய காலகட்டத்தில் வயதான பெற்றோர்களை நினைவில் கொள்வதில்லை. ஆனால் இதுபோன்ற வீடியோக்கள் பெற்றோர்களின் அன்பு, சிறு சிறு சந்திப்புகள், வாழ்வில் மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.